ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 – அசோக் சிகாமணி அறிவிப்பு
ரஞ்சி கோப்பையை வெல்வதற்கு கவனம் செலுத்தவுள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பேட்டி.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுபோன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக ஆர்ஐ பழனி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை தலைவராக இருந்த அசோக் சிகாமணி, தற்போது புதிய தலைவராக தேர்வானார். இதன்பின் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதிய தலைவர் அசோக் சிகாமணி, ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி அறிவித்துள்ளார்.
மேலும், பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவர உள்ளோம். இது பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் ரஞ்சி கிரிக்கெட் கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.