சாலையில் கால்நடைகள் சுற்றினால் ரூ.10,000 அபராதம் – அதிரடி அறிவிப்பு!
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மூன்று நாளில் பெற்று கொள்ளாவிட்டால் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை விற்று பெறப்படும் பணம் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் எனவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.