#BREAKING: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000…, திமுக அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாட்டில் பேசிய முக ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டதின் கீழ் கல்வி , சுகாதாரம், நீர்வளம், பொருளாதாரம், சமூகநீதி, நகர்புறவாளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பு என 7 துறைகளின் பல்வேறு விதமான அறிவிப்புகளை மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ரேசன் கடைகள் மூலம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மனித கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவி தொகை 2 மடங்காக உயர்த்தப்படும் என அறிவித்தார்.