கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்.15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, பயனார்களின் இறுதி பட்டியல், திட்டம் செயல்படுத்தப்படும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமை செயலாளர் சிவ்டாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரோஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் செப்.15 அண்ணா பிறந்த நாள் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர. 5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த திட்டம் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் இறுதிக்கட்ட பணிகள் குறித்து தற்போது ஆலோசித்து வருகிறார். மேலும், ரூ.1,000 பெற குடும்பத் தலைவிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…