28 மாத நிலுவைத் தொகையுடன் மகளிருக்கு ரூ.1000 வழங்க வேண்டும் – அண்ணாமலை

Default Image

மகளிருக்கான உரிமை தொகை, 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என அண்ணாமலை அறிவிப்பு. 

2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அண்ணாமலை ட்வீட் 

அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்