தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கட்டாயம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஏழ்மை குடும்பம் மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டிப்பாக செய்லபடுத்துவார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது இல்லத்தரசிகளுக்கான ரூ.1000 வழங்கும் திட்டம். தங்களது ஒவ்வொரு செலவுக்கும் கணவரையோ, மகனையோ அல்லது வேறு யாரையேனும் எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களை கவுரவிக்கும் விதமாக மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் கூட இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்தும், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இதனிடையே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை பெற ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பல்வேறு தவறான கருத்துகள் உலா வந்தன. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், இந்த திட்டத்தின் நோக்கமே குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி வழங்கவேதான். இதற்காக யாரும் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என தெரிவித்திருந்தார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…