ரூ.1000 உரிமைத் தொகை வாக்குறுதி “விதிமீறல்” இல்லை – முதலமைச்சர் விளக்கம்
மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பது என்று தேர்தல் விதிமீறல் இல்லை என முதலமைச்சர் பேச்சு.
முதல்வர் வாக்குறுதி:
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டு வருகிறார். அப்போது, பரப்புரையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதிமுக புகார்:
மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் முதலமைச்சர் வாக்குறுதி அளித்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈரோட்டில் தேர்தல் அலுவரிடம் அதிமுக புகார் மனு அளித்தனர்.
முதலமைச்சர் விளக்கம்:
இந்த நிலையில், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். அது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என ஈரோட்டில் பரப்புரையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்து பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது எனவும் விளக்கமளித்தார்.