ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி.
மாநிலத்தின் நிதிநிலை பிரச்சனை சரியானதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு கூறினார். மேலும், அவர் கூறுகையில், குடும்ப தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். மாநிலத்தின் நிதிநிலையை சரிசெய்து கொண்டே இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம். ஆறுமுகசாமி ஆணியாயத்தில் இருப்பதை சட்டமன்றத்தில் வைப்போம், அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். ஓபிஎஸ் சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் இபிஎஸ் அமைத்தார்.
இதுபோன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டே என கூறியவர் இபிஎஸ். சட்டப்பேரவையில் தாக்கல் செய்து தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுப்போம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றசாட்டை கூறி வருகிறார். சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதுதான் திமுகவின் திராவிட மாடல்.
மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். ஆட்சிக்கு வந்தவுடன் நான் இட்ட முதல் கையெழுத்து இலவச பயண கோப்பில் தான். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது. இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…