பொங்கல் பரிசு தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோகிக்க கூடாது என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்.
பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் இன்று முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து தமிழக அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோகிக்க கூடாது. இரண்டு 500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும் சில்லறை மாற்றி தரக்கூடாது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு அடிக்கு குறையாமல் கரும்பு கொடுக்க வேண்டும். கரும்பு காய்ந்து போகாமல் இருக்க ஈர சாக்கை போற்றி வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…