ஒரு கிலோ ரூ.10…தக்காளி விலை கடும் ‘வீழ்ச்சி’… விவசாயிகள் வேதனை.!!
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ந்துள்ளதாள் விவசாயிகள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து தினசரியாக 1100 டன் தக்காளிகள் வருகிறது. இந்நிலையில், தற்போது கூடுதலாக தக்காளிகள் 1400 டன் முதல் 1500 டன்கள் வந்துள்ளன.
தக்காளிகளின் வரப்பு அதிகரித்துள்ளதால் தக்காளியின் விளையும் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ10க்கு விற்பனை ஆகிறது. சில்லரை விலையில் 15 -முதல் 20-க்கு விற்கப்படுகிறது. இதன் விலை மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென, தக்காளி விலை சரிந்ததால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். மேலும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி கிலோவுக்கு 5-க்கு மட்டுமே விலை போனதால் விவசாயி ஒருவர் கூடை கூடையாக தக்காளிகள் அனைத்தையும் ஆற்றில் கொட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.