முதலை பூங்காவில் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள அல்டாப்ரா ஆமை.!

உலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான அல்தாப்ரா என்ற 55 வயதுடைய ஆமை மாயமானது.
சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான அல்டாப்ரா என்ற 55 வயதுடைய ஆமை, முதலை பண்ணையில் இருந்து காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த ஆமையின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
அல்டாப்ரா ஆமை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 1.5 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய இந்த ஆமை 200 கிலோ வரை எடை இருக்கும். சென்னை முதலை பண்ணையிலிருந்த இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு ஆமைகள் இருந்துள்ள நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆமை ஒன்று தற்போது மாயமானது.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இப்போது தான் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. திருடியவர்கள், அருகிலுள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025