கொரோனா பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

கொரோனா பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றது .கொரோனா தடுப்பில் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு இடையில் சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த அருண் காந்தி எனும் இளம் வயது போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .எனவே  மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் அருண்காந்த் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும். ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்