திருவள்ளூரை அடுத்த உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன். இவரது மனைவி பத்மாவதி இவர்களின் கடைசி மகன் யாகேஷ்.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தனியாா் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி கொண்டஞ்சேரி கிராமத்தின் சாலையில் இரவு யாகேஷ் தனது நண்பா்கள் பிராங்க்ளின், பிரேம்குமாா், வினீத்குமாா் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது மப்பேடு சந்திப்பு சாலையில் நரசிங்கபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவா் ஆட்டோவில் ஏறினாா். ஆனால் அந்த ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி வழியாக கடம்பத்தூா் சென்றது.
இதனால் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கத்தி உள்ளார். அதைக் கேட்டுத் யாகேஷ் தனது நண்பர்களுடன் ஆட்டோவைத் துரத்தி உள்ளார். அப்போது எதிரே வாகனம் வர ஆட்டோ மெதுவாகச் சென்றபோது ஆட்டோவில் இருந்து அந்தப் பெண் குதித்து விட்டாா்.
பின்னர் அந்த பெண்ணை தனியாா் மருத்துவமனைக்கு தான் நண்பர்களை அழைத்து செல்ல கூறிவிட்டு யாகேஷ் மற்றும் பிராங்க்ளின் இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவைப் துரத்தி சென்றனர். ஆட்டோவைக் கடந்து சென்று ஆட்டோவின் முன்னால் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தபோது ஆட்டோ டிரைவர் யாகேஷின் மீது ஆட்டோ கொண்டு மோதினார்.
இதனால் யாகேஷ் படுகாயமடைந்தாா். ஆபத்தான நிலையில் யாகேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் முதலமைச்சர் பழனிச்சாமி உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி எனஅறிவித்து உள்ளார்.மேலும் காயமடைந்த பிராங்க்ளினுக்கு ரூ .2 லட்சமும் , மற்ற 3 இளைஞர்களுக்கு ரூ .25,000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…