தென்காசியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் – முதல்வர் பழனிசாமி!
தென்காசியில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவர், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார். தகவல் அறிந்த கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகள் விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.
அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.
இந்த வழக்கை ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தநிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, உயிரிழந்த முத்துவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்
மேலும், முத்துவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
தென்காசியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு #Thenkasi | #TNGovt #cmedappadipalaniswami pic.twitter.com/KmLIicy6kQ
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 25, 2020