கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு சாகுபடிக்கு குறைவான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருக்கிறார்.
கரும்பு சாகுபடி
கரும்பு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2ம் இடம் பிடித்துள்ளது எனவும், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும், கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 10.63 கோடி எனவும் அறிவித்தார். கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி திட்டத்திற்கு ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அதைவிட குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மலர் சாகுபடி
- தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி விவசாயிகள் நிலையான வருமானம் ஈட்டும் வகையில் மலர்கள் சாகுபடியை ஊக்குளிக்க ரூ. 8.51 கோடி.
- தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி மல்லிகைக்கான சிறப்புத் திட்டம் பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடி
- நறுமண ரோஜாவிற்கான சிறப்புத் திட்டம் வாயிலாக உதிரி வகை ரோஜா ரோஜா மலர்களின் மலர்களின் சாகுபடி சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் ரூ.1 கோடி ஒதுக்கீடு.
முந்திரி
முந்திரியின் பரப்பு, உற்பத்தி அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் ரூ.10 கோடி ஒதுக்கீடு. இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்துள்ளதாகவும், இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025