இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல்.! 5,89,794 பேர் கைது.!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை 

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் நாடுமுழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 5,48,842 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 4276 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளிய சுற்றியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert