#BREAKING : கொரோனவால் உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.இதற்கு இடையில் புதுச்சேரியில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே புதுச்சேரியில் கொரோனாவால் 2300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025