பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி

Published by
கெளதம்

தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம், பூவைமாநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் என்பவரின் மகன் திரு அறிவரசன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அறந்தாங்கி வட்டம், சிலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகன் என்பவரின் மகன் திரு. வெங்கடேஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அறந்தாங்கி வட்டம், கத்தரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமலிங்கம் என்பவரின் மகன் திரு. கார்த்திக் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அறந்தாங்கி வட்டம், மறமடக்கி ஊராட்சி, கொரலான் குடியிருப்பைச் சேர்ந்த திரு. பழனியப்பன் என்பவரின் மகன் திரு. பிரபாகரன் என்பவர் பணி முடிந்து வரும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கந்தர்வகோட்டை வட்டம், சமுத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. துரைராஜ் என்பவரின் மகன் திரு. முருகேசன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முனியப்பம்பாளையம் கிராமத்தில் கான்கீரிட் ஊற்றப்பட்ட தொட்டியின் உள்ளிருக்கும் மரமுட்டு பலகையை எடுக்க முற்பட்ட போது, திரு. முருகேசன் மற்றும் திரு.சஞ்சய் ஆகிய இருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தைச் சேர்ந்த திரு.சுந்தரலிங்கம் என்பவரின் மகள் செல்வி சுகன்யா கிணற்றில் தவறி விழுந்து இறந்தார் எனவும், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த திரு. தமிழழகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு.சிவசங்கர் என்பவரின் மகள் சிறுமி ஹர்ஷிதா என்பவர் பேருந்து மோதிஉயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சத்தியமங்கலம் வட்டம், தொப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. வெங்கட்ராம கவுண்டர் என்பவரின் மகன் திரு. மணிமாறன் என்பவர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் உள்வட்டம், பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னான் மகன் திரு. மாதன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியும் சத்தியமங்கலம் வட்டம், தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. செந்தில் குமார் என்பவரின் மகன் திரு.சதீஸ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சத்தியமங்கலம் வட்டம், விண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திரு. ரங்கன் என்பவரின் மகன் திரு. மாரிச்சாமி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

 சத்தியமங்கலம் வட்டம், குள்ளம்காடு பகுதியைச் சேர்ந்த திரு. பசுராஜ் என்பவரின் மகன் திரு. குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சத்தியமங்கலம் வட்டம் குத்தியாலத்தூர் உள்வட்டம், திங்களும் கிராமத்தைச் சேர்ந்த திரு திம்மையன் என்பவரின் மகன் திரு போகேஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சத்தியமங்கலம் வட்டம், பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்ததிரு. பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் திரு சத்தியமூர்த்தி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தாளவாடி வட்டம், மல்லன் குழி கிராமத்தைச் சேர்ந்த திரு அய்யாமுத்து என்பவரின் மகன் திரு. ரவிச்சந்திரன் என்பவர் ஆற்று நீரில் மூழ்கி உண்டித்தார் என்ற செய்தியையும்;

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தம்மானே கிராமத்தைச் சேர்ந்த திரு. பாக்யராஜ் என்பவரின் மகன் செல்வன் வெபோன்பனாஜ் என்பவர் எயில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்றசெய்தியையும்;

வாலாசா வட்டம், கொண்டகுப்பம் மதுரா குமணந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சரோஜா என்பவரின் கணவர் திரு. பெரியசாமி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வள்ளுவர் மேடு பகுதியைச் சேர்ந்த திரு. கார்த்திக் என்பவரின் மனைவி திருமதி பரிமளா என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரி என்பவரின் மகன் திரு ரத்தினசாமி என்பவர் நீரேற்றும் பம்பில் அடைப்பினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

8 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

8 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

11 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

12 hours ago