தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. இதில் ஏராளமான மற்றும் புதிய அறியவகை கருவாடுகள் பங்குபெறும். இச்சந்தை வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு தொடங்கும், ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த சந்தையில் கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் கருவடுகளை வாங்க சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அவ்வப்போது டீசல் விலை உயர்வு மற்றும் மீன்கள் வரத்துக் குறைவால் கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஜிஎஸ்டியால் கடந்த ஆண்டு விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைவு காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிண்டனர். பின்பு நள்ளிரவு ஒரு மணியிலிருந்து காலை 6 மணி வரை நடைபெற்ற இன்றைய சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…