அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்திட்டம் ரூ. 1கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், செயல்பாட்டுத் திறன், ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட, மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும். சென்னையில் வரும் ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. உலக முழுவதுமிருந்து சுமார் 2,000 வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…