அமமுக அலுவலகத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் ! ஆண்டிபட்டியில் தேர்தல் ரத்தாகிறதா ?
ஆண்டிப்பட்டியில் பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய சோதனை நடைபெற்றது. இன்று காலை 5 மணி அளவில் முடிந்து. நடந்திய வருமான வரிச்சோதனையில் 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது.
சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக அமமுக மாவட்ட துணை செயலாளர் பழனி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் ஆண்டிப்பட்டி தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.