நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றதையடுத்து முதல்வர் வாழ்த்து.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில், 95வது ஆக்ஸர் விருது விழா நடைபெற்று வருகிறது. உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக கருதப்படும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கர் விருது.
ஆஸ்கர் விருது
இந்த நிலையில், இந்த விழாவில், இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் வாழ்த்து
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாற்றை படைத்துள்ளது. இந்த அற்புதமான சாதனைக்காக RRR இன் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்பட குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் முதல் முறையாக இந்திய படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இரண்டு பெண்களுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…