மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இரண்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்றும் அந்த 2 வேட்புமனுவிலும் இருவேறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதனை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
எனவே, இது விதிமுறை மீறல் என்ற குற்றசாட்டை முன்வைத்து எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கடித்தது அளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த வேட்புமனு மீதான பரிசீலினை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமமுக கூட்டணியில் உள்ள மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் முன்ஜாமீன் பெற்றிருப்பதற்கான அவகாசம் நிறைவடைந்து உள்ளது எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும், தேடப்படும் குற்றவாளில் என்று வேட்புமனுவில் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்து அதிமுக தரப்பில் புகார் மனு அளித்துள்ளார்கள். இதன் காரணமாகவே அவரது வேட்புமனுவின் மீதான பரிசீலினையும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…