கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் 1,520 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 17 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 457 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு, 303 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி 15 மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது.
அந்த பட்டியலில், ராயபுரம் முதல் இடத்தில் உள்ளது. ராயபுரத்தில் 92 பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, திரு.வி.க. நகர் 39, தேனாம்பேட்டை 38, தண்டையார்பேட்டை 37, கோடம்பாக்கம் 31, அண்ணா நகர் 27 பேர் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், மணலி மற்றும் அம்பத்தூரில் மட்டும் யாரும் பாதிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…