அயனாவரத்தில் இருந்த கஞ்சா வியாபாரி ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் இருந்தது. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை போலீசார் பரிந்துரை செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, என்கவுண்டர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர் முபாரக் உள்ளிட்ட நான்கு காவலர்கள், மற்றும் ரவுடி சங்கர் உறவினர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…