ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்த விவகாரத்தில் 4 காவலர்கள் இடமாற்றம்.
அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதையடுத்து, ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், ரவுடி வெட்டியதாக கூறப்படும் காவலர் முபாரக் உட்பட ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்த விவகாரத்தில் 4 காவலர்களை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, டி.பி.சத்திரத்துக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…