ரவுடி சங்கர் என்கவுன்டர்..உதவி ஆணையர் உள்ளிட்ட 7 போலீசார் ஆஜர்.!
அயனாவரத்தில் இருந்த ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் ஆகஸ்ட் 21-ம் தேதி முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் .
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஷங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளது. இதற்கிடையில், ரவுடி சங்கர் வெட்டியதால் படு காயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை போலீசார் பரிந்துரை செய்தனர்.
சமீபத்தில், ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இன்று விசாரணைக்காக உதவி ஆணையர் உள்ளிட்ட 7 போலீசார் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்கள்.