சேலம், அம்மாபேட்டை அருகே அதிகாரப்பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் மீது கொலை, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்றிரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை.
இந்நிலையில், அதிகாலையில் சரத்குமாரின் உடலில் காயங்களுடன் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாபேட்டை காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சரத்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது ரயில் மோதி இறந்தாரா என்ற கோணத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…