ரோஸ் ரோஸ் தான்.., மத்திய அரசு, மத்திய அரசு தான் – எம்எல்ஏ, வானதி சீனிவாசன்
மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சமீப காலமாக மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கை பார்க்கிறோம். ரோஜா, ரோஜா தான், அதுபோல் மத்திய அரசு மத்திய அரசு தான். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் வாசனையை மாற்ற முடியாது.
அதுபோன்று மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி எழுப்பிய கேள்விகளும், எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன.
ரோஜா ரோஜாதான். ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா? என்று கேள்வி எழுப்பிய நிதியமைச்சர், கோவை சட்டப்பேரவை உறுப்பினராக சட்டப்பேரவைக்கு வந்துள்ளாரா? அல்லது ஓர் கட்சியின் பாதுகாவலராக வந்துள்ளாரா வானதி சீனிவாசன் என்று கேள்வி எப்பியுள்ளார்.