பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இழுவை ரயில், ரோப் கார் உள்ளிட்ட சேவைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரோப் கார் சேவை, காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இருக்கும். மேலும் தரிசனத்திற்கு www.tnhrce.gov.in என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்களுக்கு மட்டுமே ரோப் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…