ரூட் தல விவகாரம் : 30 கல்லூரி மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே காவல்துறை கடிதம்.! 

Root Thala Issue

சென்னையில், மாநகர பேருந்துகள், ரயில் நிலையங்களில் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க சென்னை மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே, மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 18 வழக்குகள் பதியப்பட்டு 44 மாணவர்கள் கைது செய்ப்பட்டு இருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, மாணவர்களை நல்வழிப்படுத்த சம்பந்தப்பட்ட மாணவர்களை கவுன்சிலிங்கிற்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அதிலும் மாணவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்தும், சில மாணவர்கள் பட்டா கத்தியுடன் ரயிலில் பயணிப்பது தொடர்கதையாக இருக்கிறது

இதனை கண்காணிக்க, சென்னை மாநகர காவலர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் மாணவர்கள் பயணிக்கும் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் 30 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில கல்லூரி நிர்வாகத்திற்கு ரயில்வே துறை போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்