ரோஜாவுக்கு நீதி வேண்டும் ..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

Published by
murugan

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தை சார்ந்தவர்  ரோஜா. இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரோஜா கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து  ரோஜா , ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் சம்மதம் தெரிவித்து உள்ளார்.இதை அடுத்து ராஜேஷ் ஒரு வாரத்திற்கு முன்பு ரோஜாவை  அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்து உள்ள பரந்தூர் கிராமத்தில் சசிகலா என்பவர் தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த பெண் சடலம் ரோஜா என்பது தெரியவந்தது.
பின்னர் ரோஜா பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்கு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ரோஜாவின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ரோஜாவின் பெற்றோர்கள் மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ரோஜாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்ந்து ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஷ் திருமணமானவர் என தெரியவந்தது.  இழந்த ரோஜாவை காதலித்ததாகவும் , ரோஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  வேலூர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளமான டுவிட்டரில் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ரோஜாவிற்கு நியாயம் வேண்டும் என பலர் பதிவிட்டு  வருகின்றனர். இதற்காக #JusticeForRoja என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்! 

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

24 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

52 minutes ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

2 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

9 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

13 hours ago