குலசையில் இருந்து விண்ணில் பாய்ந்தது ரோகிணி ராக்கெட்!
Rohini Rocket : குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் முறையாக ரோகிணி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தமிழகம் பயணம் மேகொண்டுள பிரதமர் மோடி, இன்று காலை தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று ரூ.17,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டியும் வைத்தார்.
Read More – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!
அதில் குறிப்பாக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய இருக்கும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணி இதன் மூலம் தொடங்கியது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டியத்தை தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
Read More – பிரதமர் உரை… அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.! கனிமொழி எம்பி பேட்டி.!
அதாவது, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு முன்னோட்டமாக இன்று ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சிறிய ராக்கெட்டில், காற்றை அளவிடும் ஆர்எஸ்200 சவுண்டிங் கருவியை வைத்து சோதனை நடத்தப்பட்டது.
Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!
‘ஆர்.எச்.200 சவுண்டிங்’ ராக்கெட் கருவி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்டவை. எனவே, குலசேகரப்பட்டினத்தில் தற்காலிக கான்கிரீட் ஏவுதளம் அமைத்து முதல் முறையாக ரோஹிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் குலசை ஏவுதளத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.