கல்வி நிறுவனங்களில் ராக்கிங்..! டிஜிபி அதிரடி உத்தரவு..!

Published by
லீனா

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை. 

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பின்வரும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • மாணவர்களிடையே ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  • இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினரும் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி/மொபைல்/ வாட்ஸ் ஆப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
  • கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
  • பெறப்பட்ட புகார்களை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். சட்டக் கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது.
  • வழக்குகள் கோப்பில் எடுக்கப்படாத பட்சத்தில். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக கோப்புக்கு எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

raking

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

7 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

9 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

12 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

12 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

13 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

13 hours ago