நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிரடி!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் தமிழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவு வகைகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், இதற்கான பரிசோதனை முயற்சியாக முதலில் 2 ரோபோக்களை அப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதைத் தொடா்ந்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.