சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் மிகக் கொடிய வைரஸ் தான் கொரோனா. இது மூன்று மாதங்களாக உலகை உலுக்கி வந்தாலும், இதற்கான சரியான குணப்படுத்த கூடிய மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் தடுக்கும் மருந்து, வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் சிரமப்பட்டு தினமும் நின்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது நோயாளிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிதல், உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளை மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் செய்யுமளவு தற்பொழுது சென்னையில் அதுபோன்ற ஒரு ரோபோவை இளஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோவின் முகப்பு பகுதியில் ஒரு ஸ்கிரீன் இருக்கும் அதில் உத்தரவு பிறப்பிக்க கூடிய டாக்டர் அல்லது நர்ஸின் முகம் வீடியோ காட்சியாக தெரியுமாம். அறிவுரை கேட்கும் வகையில் ஒரு ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு உள்ளதாம், மேலும் வைரஸ் தாக்கப்பட்ட அவர்களின் ஆரம்ப நிலை இரண்டாம் நிலை என உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தவும் முடியும்.
டாக்டர்கள் விரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த ரோபோவை சென்னையில் உள்ள குளத்தூரை சார்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது இந்த உருவாக்கத்திற்கு தற்பொழுது அனைத்து இந்தியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…