சென்னை இளைஞர்களால் கொரோனாவுக்கு மருத்துவம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்!

Default Image

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் மிகக் கொடிய வைரஸ் தான் கொரோனா. இது மூன்று மாதங்களாக உலகை உலுக்கி வந்தாலும், இதற்கான சரியான குணப்படுத்த கூடிய  மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் தடுக்கும் மருந்து, வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள்  மிகவும் சிரமப்பட்டு தினமும் நின்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது நோயாளிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிதல், உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளை மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் செய்யுமளவு தற்பொழுது சென்னையில் அதுபோன்ற ஒரு ரோபோவை இளஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரோபோவின் முகப்பு பகுதியில் ஒரு ஸ்கிரீன் இருக்கும் அதில் உத்தரவு பிறப்பிக்க கூடிய டாக்டர் அல்லது நர்ஸின் முகம் வீடியோ காட்சியாக தெரியுமாம். அறிவுரை கேட்கும் வகையில் ஒரு ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு உள்ளதாம், மேலும் வைரஸ் தாக்கப்பட்ட அவர்களின் ஆரம்ப நிலை இரண்டாம் நிலை என உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தவும் முடியும்.

டாக்டர்கள் விரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த ரோபோவை சென்னையில் உள்ள குளத்தூரை சார்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது இந்த உருவாக்கத்திற்கு தற்பொழுது அனைத்து இந்தியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்