ஊரடங்கு கண்காணிப்பு பணியில் களமிறக்கப்பட்ட ரோபோக்கள்.! சென்னை போலீசாரின் அசத்தல் ஐடியா.!
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் கண்காணிப்பு ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் பல பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மக்கள் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள தற்போது சென்னை காவல்துறையினர் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ள.
அதன்படி, சென்னையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், கேமிரா மூலம் மக்களை கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
முதன் முதலாக சென்னை, மயிலாப்பூரில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ரோபோக்கள் மூலம் சென்னை போலீசார் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.