Election2024 : நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பளாராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வரையில் காங்கிரஸ் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது வரையில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக விஜய் வசந்த் (காங்கிரஸ்) மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதனால், நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது , நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் என்பவரை அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை. இவர் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பர்ட் எனும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…