“காவலரிடமே கை” வைத்த கொள்ளை கும்பல்..!!

Default Image

சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆயுதப்படை காவலரான மணிமாறன், கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சீருடையுடன் வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட்டபோது, பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.

அவர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அபிராமபுரம் போலீசார், சந்தேகத்துக்குரிய 3 பேர் மந்தைவெளி, அபிராமபுரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

அதன் அடிப்படையில், ஓட்டேரி, கொடுங்கையூர் பகுதிகளைச் சேர்ந்த வெங்கடேசன், மேகசூர்யா என்ற பேய்க்குழந்தை, சரவணன் என்ற அப்பு மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஸ்மார்ட்போன்களும், வழிப்பறிக்கு பயன்படுத்தி வந்த 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)