முதியவர்களை குறிவைத்து கொள்ளை.. வசமாக பிடிபட்ட இன்ஸ்டா காதல் ஜோடி… கோவையில் துணிகரம்.!
கோயம்புத்தூர் மாவட்டம்,வடவள்ளி நகரம் அருகே, இருக்கும் பம்மனாம்பாளையத்தில், தனியாக வசித்து வந்த 80 வயது முதியவர் பெரிய ராயப்பன் எனும் நபரை கட்டிப்போட்டு ஒரு காதல் ஜோடி வீட்டில் கொள்ளையடித்து தப்பிக்க முயற்சித்து பிடிபட்டுள்ளனர்.
அதாவது, பெரிய ராயப்பன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்கள் தனியாக இருப்பதை புத்தகம் விற்கும் சாக்கில் நோட்டம் விட்ட காதல் ஜோடிகளான, 23 வயதான தினேஷ்குமார் மற்றும், திருச்சியை சேர்ந்த 24வயது செண்பகவல்லி ஆகியோர், முதியவர் தனியாக இருப்பதை அறிந்துக்கொண்டுள்ளார்.
பெரிய ராயப்பன் மனைவி மருத்துவமனை சென்றுள்ளார். அந்த சமயம் வீட்டிற்குள் நுழைந்த இவர்கள் முதியவரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். அவரும் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற போது, அவரை லாவகமாக மடக்கி கட்டிப்போட்டு உள்ளனர் இந்த திருட்டு காதல் ஜோடி.
பின்னர் பீரோலை உடைக்க முயன்று அது தோற்று போகவே, அருகில் இருந்த 2000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பின்கதவு வழியாக தப்ப முயன்றுள்ளனர். அந்த சமயம் பெரிய ராயப்பன் மருமகள் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த காதல் ஜோடி, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி தப்ப முயன்ற போது, அக்கம்பக்கத்தினர் அந்த காதல் ஜோடியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பிடித்து கொடுத்தனர்.
அவர்களை போலீசார் விசாரிக்கையில், இந்த வீடு மட்டுமல்லாது, கோவை குனியமுத்தூரிலும் முதியவரை கட்டிப்போட்டு 20 ஆயிரம் திருடியது அம்பலமானது. வழகுபதிவு செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.