துப்பாக்கி முனையில் கொள்ளை – வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது.!
முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் கொள்ளையில் ஈடுபட குற்றவாளிகளை ஐதராபாத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.
நேற்று காலை ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று, ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டன.
பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. ஜிபிஎஸ் மூலம் கண்டறியப்பட்ட கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்தது. அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிறகு ஜிபிஎஸ் துண்ணடிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத் சம்சாத்பூர் அருகே கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. குற்றவாளிகளிடமிருந்து7 துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மீட்கப்பட்ட நகை மற்றும் குற்றவாளிகள் அனைவரும் ஐதராபாத் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர். தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக போலீசார் முறைப்படி குற்றவாளிகளையும், நகைகளையும் மீட்டு வருவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.