மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும்-முதலமைச்சர் பழனிசாமி
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ 24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால், தொளசம்பட்டி சாலையில் ரூ.5.25 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பாலங்களையும் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி ஆலை அமைக்கப்படும். சென்னைக்கு அருகே ரூ.2000 கோடியில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும். அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமானால் உள்கட்டமைப்புகள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று பேசினார்.