புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்… போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களை தவிர்க்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்களும். வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்படுகிறது.
மேலும், கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நாளை (31ம் தேதி) புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை. எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, இப்புத்தாண்டினை விபத்து இல்லாத கொண்டாட்டங்களாக இருப்பதை உறுதி செய்ய சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களை தவிர்க்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்களும். வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட உள்ளது.
காமராஜர் சாலை மற்றும் எலியாட் கடற்கரை:
- கடற்கரை உட்புற சாலை நாளை (டிச,31) அன்று மாலை 7 மணி முதல் (ஜன,1) அன்று காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.
- கடற்கரை உட்புற சாலையில் மாலை 7மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
- காமராஜர் சாலை போர் நினையிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை நாளை 8 மணி முதல்(ஜன,1) அன்று காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
- அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- டாக்டர்ஆர் கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்கே.மட் சாலை சந்திப்பு மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
- பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் நிசர்ன் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலஜா பாய்ண்ட் அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
- வாளஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
- கொடிலரச் சாலையில், வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகளங்கள் அனுமதிக்கப்படாது.
- கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவதாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு, சாய்பாபா கோயில், நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆர்பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாகா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.
காமராஜர் சாலை வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:
- சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
- வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி – ஒற்றை வரிசை நிறுத்தம்)
- தீவுத்திடல் மைதானம்
- பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
- பிரஸ் கிளப் சாலை
- பொதுப்பணித்துறை வளாகம் காவல்துறை வாகனங்கள் மட்டும்
- கலைவாணர் அரங்கம்
- விக்டோரியா விடுதி
- பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை x பாரதி சாலை சந்திப்பில் இருந்து – ஒற்றை வரிசை நிறுத்தம்)
- லாயிட்ஸ் சாலை (மாற்று திறன் ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் நடேசன் சாலையை நோக்கி – ஒற்றை வரிசை நிறுத்தம்)
- இராணி மேரி கல்லூரி வளாகம்.
- லேடி வெலிங்டன் பள்
- NKT
- டால்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
- பரத் சாரணர் வளாகம்
- தெற்கு கால்வாய் சாலை (மந்தவெளி நோக்கி
- தெற்கு கால்வாய் சாலை (பட்டினம்பாக்கம் நோக்கி)
எலியாட் கடற்கரை போக்குவரத்து மாற்றம்
- 31.12.2024 அன்று 20.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை 6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
- 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு. 3வது மெயின் ரோடு சந்திப்பு. 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.
புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மெரினா,எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்குதடை.முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடல் கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும்அறிவிப்பு #NewYear2025 #TNPolice pic.twitter.com/7nqorlNI77
— Petti Kadai Media (@PettiKadaimedia) December 30, 2024