தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி வரும் 18-ம் தேதி( சனிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி வரும் 18-ம் தேதி( சனிக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திர நாராயண் ரவி 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் 1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக கேரளாவில் பணியாற்றினார். பின்னர்,சி.பி.ஐ-யில் பணியாற்றினர்.இதைதொடர்ந்து, மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக இருந்து 2012-ல் ஓய்வுபெற்றார்.
கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து…
வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20…
சென்னை ;மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்;…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி…
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு…
டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த்…