தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி வரும் 18ம் தேதி பதவியேற்பு..?

Default Image

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி வரும் 18-ம் தேதி( சனிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி வரும் 18-ம் தேதி( சனிக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திர நாராயண் ரவி 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் 1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக கேரளாவில் பணியாற்றினார். பின்னர்,சி.பி.ஐ-யில் பணியாற்றினர்.இதைதொடர்ந்து, மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக இருந்து 2012-ல் ஓய்வுபெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
Red Alert
Vaikom 100 - MK Stalin - Pinarayi Vijayan
poondi dam
rajinikanth - tvk vijay -mk stalin