தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்…! யார் இந்த ஆர்.என்.ரவி…?

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.என்.ரவி அவர்களின் வாழ்க்கை பின்னணி.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி ரவி. இவர் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வாழ்க்கை பின்னணி குறித்து பார்ப்போம்.
இவர், 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு, உளவுத்துறை சிறப்பு இயக்குனராக இருந்து பணி ஓய்வு பெற்றார். 2014-ல் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து குழுவிற்கும், இந்திய அரசுக்கும் இடையில் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாக, போராட்டக் குழுவுக்கும் இந்திய அரசுக்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை 2015ல் கையெழுத்தானது.
அதன்பின் 2018ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது 2021 செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025