RK Suresh appeared [file image]
ஆருத்ரா கோல்டு நிறுவன சுமார் (ரூ.2,438 கோடி) மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்க்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆர்கே சுரேஷ் ஆஜராகாத நிலையில், அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் அனுப்பட்டது.
இதை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், இவ்வழக்கு விசாரணையின்போது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் கூறியதாவது, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக உறுதி அளிக்கப்பட்டது.
ஐயப்ப பக்தர் போல் வலம் வந்த கோவை நகைக்கடை கொள்ளையன் கைது.. துணை ஆணையர் விளக்கம்!
இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே சுரேஷை விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக துபாயில் இருந்து வந்திருப்பதாக ஆர்கே சுரேஷ், அதிகாரிகளிடம் கூறியதை அடுத்து, செல்வதற்கு அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷ், மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் ஒன்னும் தலைமறைவாகவில்லை என்றும் விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்திப்பேன் எனவும் கூறினார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…