18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் சரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் சரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும்.ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏமாந்துவிட்டார்கள் .மற்ற தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…