திமுக ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘கடந்த 8 மாதகால விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் தாக்கப்படும் காட்சிகள், காவல் நிலையத்திலேயே சர்வ சாதாரணமாக அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்கள், சமூக, செய்தி ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதே நேரம், குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரை பிடிக்கும் ஒருசில காவலர்கள். அவர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த நிகழ்வுகளும், சமூக, செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வந்த வண்ணம் உள்ளன.
இதற்குக் காரணம் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம்தான். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன அழுத்தத்தைக் குறைக்க, மாண்புமிகு அம்மாவின் அரசு பெங்களூரு நிம்மான்ஸ் என்ற மருத்துவமனையுடன் இணைந்து காவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் காவலர்களை சட்டப்படி பணியாற்ற அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், இந்த விடியா அரசு வாய்ச் சொல்லில் விரரடி என்பது போல், நேரடியாக புகார்களை வாங்குதல், பெண் காவலர்களுக்கு குறைவான பணிச் சுமை, வார விடுமுறை போன்ற பலவற்றை செய்வதாகக் கூறினாலும், நடைமுறையில் இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன,
அரசியல் அழுத்தம், பொது வெளியில் ஒருசில காவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலைமை, உயர் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாக முடிவு காணுங்கள் என்று தனக்குக் கீழ் உள்ள காவலர்களுக்கு அழுத்தம் தருதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் காவலர்கள், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தங்களது வெறுப்பைக் காட்டும் நிலைமை ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். நான், ஏற்கெனவே 7.12.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட ஒருசில சம்பவங்களை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதனிடையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததுடன், மாற்றுத் திறனாளியின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் சரக DIG அவர்கள், சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
12-ஆம் தேதி நடைபெற்ற, இந்த மாற்றுத் திறனாளியின் மரணம் பற்றிய செய்தி 16-ஆம் தேதிவரை மக்களைச் சென்றடையாமல் இந்த விடியா அரசும், காவல் துறையும், ஊடகங்களும் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது, பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள், தமிழ் நாட்டில் இருந்து மறைந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மேலும், நான் ஏற்கெனவே கூறியபடி, காவல் துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள்; சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துங்கள்; தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். மேலும், உண்மைச் சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் இந்த விடியா அரசை கண்டிக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…